மக்களே…. மார்ச் 31-க்குள் இதை செய்து முடிச்சிடுங்க…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் கார்டையும், ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. இவ்வாறு இரண்டையும் இணைக்காவிட்டால் பான் கார்டு செயல் இழந்து விடும் என்றும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. பான் கார்டு எண்ணை இணைக்க தவறினால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே அரசு எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதார் கார்டுடன் பான் கார்டு எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

# Income tax அதிகாரப்பூர்வ வலைத்தளமான incometaxindiaefiling.gov.in என்ற பக்கத்திற்கு செல்லவும்.

# அதில் LINK Aadhaar என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, உங்களின் பான் எண், ஆதார் எண் மற்றும் பெயர் போன்ற விவரங்களை உள்ளிடவும்.

# தகவல்கள் அனைத்தையும் உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

# பான் இணைப்பு பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஆதாரில் இருந்து வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *