மக்களே… தேர்தல் பற்றி புகார் அளிக்கனுமா?… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மக்களுக்கு தேர்தல் பற்றி புகார்கள் ஏதாவது இருந்தால் அதனை தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமன்றி தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 108 செலவின பார்வையாளர்கள் மூலம் கட்சிகள், வேட்பாளர்களின் செலவினங்கள் கண்காணிக்கப்படும். தேர்தல் குறித்து 1950 என்ற எண்ணிலும், 180045521950 என்ற கட்டணமில்லா எண்ணிலும் புகார்களை அளிக்கலாம். C Vigil என்ற செல்போன் செயலி மூலமும் மக்கள் புகார்களை தெரிவிக்கலாம். மேலும் சோதனை வாக்குப்பதிவின் போது தவறு கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் உடனே வாக்குப்பதிவு நிறுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.