மக்களே….! தேசிய கொடியை அப்புறப்படுத்தும்போது….. அரசின் முக்கிய உத்தரவு….!!!!

தேசியக் கொடி என்பது பெருமையின் சின்னம், அதை அகற்றும் போது அதன் கண்ணியம் பேணப்பட வேண்டும். 2002 ஆம் ஆண்டின் இந்தியக் கொடிச் சட்டத்தின்படி, தேசியக் கொடியை அப்புறப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று எரித்தல் அல்லது புதைத்தல்.
புதைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: சேதமடைந்த அனைத்து கொடிகளையும் ஒரு மரப்பெட்டியில் சேகரிக்கவும். அவற்றை மடித்து ஒழுங்காக வைக்கவும். பெட்டியை பூமியில் புதைக்கவும். கொடிகள் புதைக்கப்பட்டவுடன் சிறிது நேரம் மௌனம் கடைபிடிக்கவும்.

எரிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
கொடியை எரிக்க முடிவு செய்து விட்டால் அதற்காக பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து சுத்தம் செய்யவும். கொடிகளை மடித்த பிறகே நெருப்பை மூட்ட வேண்டும். கொடிகளை மடக்காமல் தீ வைப்பது குற்றமாகும். மேலும் காகிதத்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை குடிமக்கள் தரையில் வீழும் படி விடக்கூடாது. தண்ணீரில் மிதக்கும்படி விடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *