மக்களே! தமிழகம் முழுவதும் நாளை…. மறக்காம போய் போட்டுக்கோங்க…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறவுள்ளது. சென்னையில் 200 வார்டுகளில் 1,600 முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் மாநகராட்சி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை http://chennaicorporation.gov.in/gcc/covid-details /mega-vac-det.jsp என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *