நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் தற்போது வங்கி விடுமுறை தினங்கள் குறித்து பார்ப்போம். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை தோறும் வங்கிகளுக்கு பொது விடுமுறை. அதன் பிறகு முக்கிய பண்டிகை தினங்கள் அதாவது அரசு விடுமுறை தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை. அந்த வகையில் நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 3ஆம் தேதி அதாவது நாளை ஞாயிறு வார விடுமுறை.
அதன் பிறகு நவம்பர் 9ஆம் தேதி வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு விடுமுறை. இதைத்தொடர்ந்து நவம்பர் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. அதன் பிறகு நவம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. இதேபோன்று நவம்பர் 24 ஆம் தேதியும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. மேலும் இந்த மாதத்தில் மொத்தம் வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை கணக்கில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் பணிகளை முன்கூட்டியே வங்கிகளுக்கு சென்று முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.