சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாது என்றும் இதன் காரணமாக பொதுமக்கள் கனமழையை நினைத்து அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார். அதன் பிறகு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மழை பொழிவைப் பொறுத்தவரை இதே நிலைதான் நீடிக்கும். விட்டு விட்டு மழை பெய்யும். வட தமிழகத்தை ஒட்டிய கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது.

இது வலுவடைய வாய்ப்பு கிடையாது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம். வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகத்தான் பெய்துள்ளது என்றார். மேலும் சென்னை உட்பட அதன் புறநகர் மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் யாரும் கனமழையை நினைத்து அச்சப்பட வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் தெரிவித்துள்ளார்.