நடப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டமானது அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு தகுதியான பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை ஜூன் 25-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுது.

ஜூலை 10-ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தி உள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.