மக்களே உஷார்!…. புது வகை வங்கி மோசடி…. டிஜிபி வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு……!!!!!

நாடு முழுவதும் மக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன் மற்றும் பணபரிமாற்ற செயலிகள் மூலமாகவும் பணத்தை அனுப்புகின்றனர். அத்துடன் மற்றவர்களிடம் இருந்தும் பணத்தை பெறுகின்றனர். இதனால் தற்போது வங்கிகளுக்கு செல்லவேண்டிய அவசியமே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. இவ்வாறு பணபரிமாற்றம் செய்து வரும் நேரத்தில் சில மோசடிகளும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் புது நெட் பேங்கிங் மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட வீடியோவில், ஓடிபி, பான்கார்டு எண் ஆகிய விபரங்களை வாடிக்கையாளர்கள் பகிர வேண்டாம். கவனம் இல்லை என்றால் மொத்த பணத்தையும் திருடி விடுவார்கள். இருப்பினும் ஏமாந்துவிட்டால் 1930 என்ற எண்ணை அழைக்கவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply