மக்களே உஷார்… புதிய வகை கொரோனா…. ஆய்வு நடப்பதாக மத்திய அரசு தகவல்…!!!!!

ஓமைக்ரான் எக்ஸ்இ மரபணுவின் பகுப்பாய்வு நடந்து வருவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கிறது. இது அதிவேமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கொரோனா வைரஸின் எக்ஸ்இ எனப்படும் புதிய மாறுபாடு ஓமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின்  கலப்பு என்று கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து முழுவதும் இதுவரை 637 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் இதேபோன்றதொரு திரிபு பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம் போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.இதுபற்றி உலக சுகாதார துறை அமைப்பு கூறியபோது, ஓமைக்ரான் வைரஸின் பிஏ.2  துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ எனப்படும் கொரோனோ  வைரஸ் புதிய திரிபானது  10 சதவீதம் அதிகமாக பரவ  வாய்ப்பிருக்கிறது. தற்போது வரை  ஓமைக்ரானின்  பிஏ.2 துணை மாறுபாடு வைரஸ்களில் மிகவும் தீவிரமாக பார்க்கப்படுகிறது.

எக்ஸ்இ தொடர்பான புதிய ஆராய்ச்சி உறுதி செய்யப்பட்டால் அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கொரோனா  வகையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் மும்பை வந்த ஆடை அலங்கார பெண்களுக்கு மார்ச் 2-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு எக்ஸ்இ வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மும்பை மாநகராட்சி கூறியிருந்தது. ஆனால் மும்பையில் கண்டறியப்பட்டது  ஒமைக்ரானின் உருமாற்ற வகையான எக்ஸ்இ (XE) வைரஸ் வகைத் தொற்று  இல்லை, அதற்கான போதிய ஆதாரம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

INSACOG மரபணு நிபுணர்கள் நடத்திய ஆய்வில் XE வகைத் தொற்று இல்லை என தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந் நிலையில், மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு சென்ற ஒருவருக்கு இந்த புதிய வகை ஓமைக்ரான் எக்ஸ்இ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்தஓமைக்ரான்  எக்ஸ்இ மரபணுவின் பகுப்பாய்வு நடந்து வருவதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *