மக்களே உஷார்…. குரங்கு அம்மை நோய் பரவும் அபாயம் அதிகம்…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!!!!!!

உலக சுகாதார அமைப்பின் தலைவர் மெலிடா உஷ்னோவிக் ரஷ்ய செய்தி ஊடகம் ஸ்புட்னிக்கிடம் கூறும் போது, மண்டல அளவில் உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி ஐரோப்பிய பகுதியில் குரங்கு அம்மை பரவக்கூடிய ஆபத்து அதிகமாக இருக்கிறது. அனைத்து நாடுகளிலும் புதிய பாதிப்புகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்பில் உள்ளவர்களையும் கண்டறிய வேண்டும். மேலும் அதன் அதிவேக பரவலை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, கனடாவில் அதிக அளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றது.

ஆப்பிரிக்காவில் உள்ள எட்டு நாடுகளில் இதுவரை 1500 க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகி இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நோய் பாதிப்பு பெருமளவில் எலிகள் போன்ற வனவிலங்குகளுடன் காணப்பட்டு வருகிறது. அவற்றிலிருந்து மனிதர்களுக்கு பரவ கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தோளில் அரிப்பு மற்றும் நிணநீர் கணுக்காலில் வீக்கம் போன்றவை காணப்படுகிறது. இது தவிர மருத்துவ சிக்கலான நிலைக்கும் கொண்டு செல்லக்கூடும் இதன் பாதிப்பு 2 முதல் 4 வாரங்கள் வரை  நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் தொடங்கிய இந்த தொற்று பரவலானது கடந்த மே 13ஆம் தேதி ஜூலை 1 ம் தேதி வரையில் மனிதர்களில் 51 நாடுகளில் 5,100 பேருக்கு பதிவாகி இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *