வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதன் முதலான மழை பெய்யக்கூடும். காலை லேசான பனி மூட்டம் நிலவும். குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.