மக்களே உஷார்… இந்த மீன் வகைகளை அதிகமாக சாப்பிடாதீங்க… ரொம்ப ஆபத்து…!!!

இந்த மீன்களை அதிக அளவு சாப்பிட்டால் அது உடலுக்கு பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சைவ உணவுகளும் உண்டு அசைவ உணவுகளும் உண்டு. பொதுவாக அசைவ உணவுகளில் மீன்கள் என்றால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். கடல் உணவான மீனில் அதிக கொழுப்பு உள்ளதால் உடல் எடையை அதிகரிக்கிறது.

மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒமேகா-3 உள்ளது. அதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பது மட்டுமல்லாமல் டயட்டில் இருப்போருக்கு மிக சரியான உணவு. இருந்தாலும் சில மீன்களை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும். அவ்வாறு எந்த மீன்களை அதிக அளவு சாப்பிட கூடாது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

கானாங்கெளுத்தி மீனில் இருக்கும் உயர்ரக மெக்னீசியம் உடலுக்கு நல்லது. ஆனால் அதில் அதிக அளவு பாதரசம் உள்ளதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும் விலாங்குமீன் அதிகம் சாப்பிடுவது உடலுக்கு பேராபத்து. வாளை மீனில் அதிக அளவு பாதரசம் உள்ளது. இது அதிக அளவு சாப்பிடும் போது மூளையின் செல்களை சேதம் அடைய செய்கிறது. நீல நிற துடிப்பு மற்றும் பெரிய கண்களுடைய இரண்டு வகையான சூரை தான் உடலுக்கு அதிக கேடு விளைவிக்கும்.

வாளை மீனுக்கு அடுத்ததாக அதிக அளவு பாதரசம் அளவு கொண்டுள்ள மீன் இதுவாகும். சிலவகை சால்மன் மீன்களில் கரிம மாசு நிலை பெற்று இருப்பதால், நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகிறது. இதனை அதிக அளவு சாப்பிடுவது மிகவும் அபாயமானது. பால் சுறா போன்ற ஒரு சில வகைகளை தவிர்த்து மற்ற அனைத்தும் விஷத்தன்மை கொண்டவை என்பதால் சுறாவை சாப்பிடக்கூடாது. மேலும் இதில் பாதரசம் அதிக அளவு உள்ளது. எனவே இது போன்ற மீன்களை தவிர்த்து சாப்பிடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.