மக்களே உஷார்! ஆன்லைனில் ஐபோன் ஆர்டர்…. வந்தது ஐபோன் வடிவில் மேஜை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

இன்று பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் ஐபோன்களுக்கு பதிலாக செங்கல், சோப்பு மற்றும் போலியான ஐபோன்களை கொடுத்து ஏமாற்றி வருகின்றனர்.  இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாகவே அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் குறைந்த விலையில் ஐபோன் தருவதாக விளம்பரத்தை பார்த்துள்ளார். இதையடுத்து நீண்ட நாட்களாகவே ஐபோன் ஆக வேண்டுமென்ற ஆசையில் இருந்த அவர் உடனடியாக அந்த ஐ போனை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளாமலே ஆர்டர் செய்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு ஐபோன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பார்சலை வாங்கியுள்ளார். ஆனால் அந்த பார்சலில் அளவு பெரிதாக இருந்ததால் திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஏனெனில் ஐ போன் வடிவில் காபி டேபிள் வந்துள்ளது. ஐபோன் வடிவில் காபி டேபிள் இருந்ததை பார்த்து அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கூறிய அவர், போலியான விளம்பரத்தை பார்த்து ஏமாந்து விட்டேன். எனவே இது போன்று யாரும் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.