தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நவம்பர் இரண்டாம் வாரத்தில் பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் வருகிற 7-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.