நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான தனித்துவ அடையாள ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதனை கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14ஆம் தேதி வரை இருந்த நிலையில் ஆதார் மையங்களில் கூட்டம் அலை மோதியது. அதாவது ஆதார் அப்டேட் குறித்து போலியான செய்திகள் பரவியதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே  ‌https:/myaadhaar.uidai.gov.in/என்ற இணையதள முகவரிக்குள் சென்று இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். இல்லையெனில் அருகில் உள்ள ஆதார் ‌ சேவை மையத்திற்கும் சென்றும் புதுப்பிக்கலாம். மேலும் 14 ஆம் தேதிக்குப் பிறகு ஆதார் கார்டு புதுப்பிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ரூபாய் 50 கட்டணமாக செலுத்த வேண்டும். எனவே குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.