நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகின்றனர். அதேசமயம் பலரும் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி டெபாசிட் செய்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2000 ரூபாய் நோட்டுக்களை 24×7 டெபாசிட் செய்ய ஏடிஎம்களில் உள்ள டெபாசிட் இயந்திரங்களை பயன்படுத்தலாம் என்றும் மூத்த குடிமக்கள் வீட்டு வாசலில் வங்கி வசதியை பயன்படுத்தி 2000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம் எனவும் கூறியுள்ளது.