மக்களே இத மட்டும் செய்யுங்க…. ஊரடங்கே தேவையில்லை…. முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்திவுள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் படிப்படியாக இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜரிவால் கூறியது, டெல்லியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். அவ்வாறு முகக்கவசம் அணிந்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. மேலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *