மக்களே அலெர்ட்..! 5 நாட்கள் வங்கிகள் இயங்காது…. எந்தெந்த நாட்கள் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜன.30, 31 ஆகிய  தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் இந்த 2 நாட்கள் மற்றும் நாளை குடியரசு தினம், 28ம் தேதி 4வது சனி, 29ம் தேதி ஞாயிறு என மொத்தம் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது என தெரிகிறது. எனவே, இன்று அல்லது வெள்ளிக்கிழமை வங்கி தொடர்பான பணிகளை முடித்து விடுங்கள்.

Leave a Reply