மக்களே அலெர்ட்…. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் புதிய உச்சம்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு கொண்டிருக்கிறது. அதன்படி தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,91,959 ஆகவும் 36 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,956 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. சென்னை -8,963, செங்கல்பட்டு- 2,504, கோவை – 1,564, திருவள்ளூர் – 1,393 என அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் இன்றைய கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *