மக்களே அட்டகாசமான வாய்ப்பு…. வெறும் 1 ரூபாய்க்கு கூட தங்கம் வாங்கலாம்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!!

வெறும் 1 ரூபாய்க்கு கூட தங்கத்தை வாங்கும் வகையிலான சிறப்பு வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கம் விலை உயர்வு என்பது நீண்டகாலமாகவே எழுந்து வரும் பெரும் பிரச்சனையாக உள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 38,000 ரூபாயை கடந்து விட்டது. இதனால் வசதி படைத்தவர்கள் மட்டுமே தங்கம் வாங்க முடியும் என்ற சூழல் தற்போது வந்துவிட்டது. அதனை மாற்றியமைக்கும் வகையில் சாமானிய மக்களும் தங்கத்தை வாங்கும் வகையிலான சிறப்பு வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் பெரிய விலை கொடுத்து தங்கத்தை நேரடியாக வாங்குவது சாதாரண மக்களுக்கு கடினமான காரியமாகும். அதற்காக டிஜிட்டல் தங்கம் என்ற ஒரு வசதி உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வெறும் 1 ரூபாய்க்கு கூட தங்கம் வாங்க முடியும். அந்த வகையில் கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் போன்ற மொபைல் ஆப்களில் இந்த வசதியானது உள்ளது.

அதில் சென்று உங்களால் செலுத்தக் கூடிய வகையில் சிறிய தொகையில் இருந்து தங்கத்தை வாங்கலாம். மேலும் தங்கத்தின் விலையானது உயரும்போது, உங்களது ஆப்பில் சேமித்து வைத்திருக்கும் அந்த தங்கத்தை, நீங்கள் விற்று, அதன் மூலம் பணமும் சம்பாதிக்கலாம். அதற்கான தொகை உங்களது அக்கவுண்ட்டிலேயே மாற்றப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தங்க நாணயமாக கூட வாங்கிக்கொள்ளும் வசதியானது உள்ளது. அதன்படி அந்த தங்க நாணயம் உங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை போல் வெள்ளியில் முதலீடு செய்து வெள்ளி நாணயங்களையும் வாங்கலாம். இதற்கு உதாரணமாக, போன் பே மொபைல் ஆப்பில் investment என்ற பிரிவின் கீழ் உள்ள gold என்ற வசதியில் சென்று நீங்கள் தங்கத்தை வாங்கலாம் எனவும் கிராம் அடிப்படையிலும், ரூபாய் அடிப்படையிலும் நீங்கள் தங்கத்தை வாங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.  இந்த வசதியைப் பயன்படுத்தி சமீப நாட்களில் நிறையப் பேர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *