மக்களுக்கு வந்த அதிரடி எச்சரிக்கை – படு வேகமெடுக்கும் கொரோனா – பயத்தில் மக்கள்..!!!

14 மாநிலங்களில் உள்ள 32 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இரண்டு வாரங்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்பட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 32 மாவட்டங்களில் தினசரி தொற்று விகிதம் பத்து சதவீதத்தை தாண்டி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த 32 மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு விகிதம் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மூன்றரை மடங்கு அதிகரித்துள்ளது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரள மாநிலம் வயநாட்டில் 14.8 சதவீதம் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.