மக்களின் தொடர் போராட்டம் … கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகளில் தளர்வு… பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு…!!!!!

கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பதாக  சீன அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியதால் தலைநகர் பீஜிங்  உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் கட்டுப்பாடுகளை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அதிபர் ஜின் பிங்கை பதவி விலக கோரி வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் போலீஸ் படை மூலமாக போராட்டங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் ஒரு சில நகரங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதனால் சீன அரசு பொது மக்களின் கோபத்தை தணிக்கும் விதமாக கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன்படி பீஜிங்கில் உள்ள சூப்பர் மார்க்கெட், வணிக வளாகங்கள் உள்ளிட்ட வணிக கட்டிடங்களிலும் குடியிருப்பு வளாகங்களிலும் நுழைவதற்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனைகள், பள்ளிகள், ஹோட்டல்கள் மற்றும் மதுபான விடுதிகள் போன்றவற்றில் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட  கொரானா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்கின்ற கட்டுப்பாடு விதித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.