மக்களவை முன்னாள் துணைத்தலைவர்…. மருத்துவமனையில் அனுமதி…!!!!!

மக்களவையின் முன்னாள் துணைத்தலைவர் கரிய முண்டா ஜார்கண்டின்  குந்தி  மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது பற்றி மருத்துவர்கள் கூறும் போது, வியாழன் இரவு குறைந்த இரத்த சர்க்கரை காரணமாக மயக்கம் அடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது நிலையாக இருப்பதாகவும், மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளனர். முன்டாவை  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பசுமை வழிச்சாலை உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நிமோனியா மற்றும் பிற  உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் குந்தி  தொகுதியில் எட்டு முறை எம்பியாக இருந்தவர். மேலும் பத்மபூஷன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *