
உத்திரபிரதேச மாநிலத்தில் பிரக்யராஜ் பகுதியில் கங்கா, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒன்றாக சங்கமிக்கும் இடம் உள்ளது. இங்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறும். இந்த திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை மொத்தம் 45 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு அகோரிகள் மற்றும் முனிவர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழாவில் வித்தியாசமான பல அகோரிகள் மற்றும் சாமியார்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் முள் பாபா என்று அழைக்கப்படும் காண்டே வாலே பாபா என்பவர் கலந்து கொண்டுள்ளார்.
இவர் மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் முட்களை போட்டு அதன் மேலே படுத்திருந்தார். இவர் கிட்டதட்ட 50 வருடங்களாக இப்படி முட்களில் படுப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் அவரின் அருகே சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த முட்கள் உண்மையானதா என்று கேட்டுள்ளார். இது பாபாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் கோபத்தில் எனது அவரின் சட்டையை பிடித்து ஓங்கி ஒரு அறைவிட்டார். பின்னர் இந்த முட்களில் நீயே வந்து படுத்து பாரு அது உண்மையா பொய்யா என்பது தெரியவரும் என்றார். இதன் காரணமாக அந்த பத்திரிக்கையாளர் அங்கிருந்து சென்றுவிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
ये वाली वीडियो है रिपोर्ट की 🤣😭 pic.twitter.com/NsmJ04ra84
— Champaran wala (@champaranwala) January 16, 2025