மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவின் சின்ச்வாட் தொகுதியின் பாஜக எம்எல்ஏ லக்ஷ்மன் ஜக்தாப் (59) புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். கடந்த ஒரு மாத காலமாகவே உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்ட லக்ஷ்மன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி எம்எல்ஏ லக்ஷ்மன் ஜக்தாப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் 3 முறை சின்ச்வாட் தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த மாதம் 22-ஆம் தேதி பாஜக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ முக்தா திலக்‌ (57) என்பவரும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். மேலும் பாஜக கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.