மகாத்மா காந்தி பிறந்த தினம்… ஐநா பொது செயலாளர் வாழ்த்துச் செய்தி…!!!!!

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினம் சர்வதேச அகிம்சை தினமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் கூறப்பட்டிருப்பதாவது சர்வதேச அகிம்சை தினத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடிவருகின்றோம். அதுமட்டுமல்லாமல் அனைவராலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய மகாத்மா காந்தி காட்டிய அமைதி மரியாதை மற்றும் அத்தியாவசிய கண்ணியத்தின் மதிப்புகளையும் கொண்டாடி வருகின்றோம்.இவற்றை உள்வாங்கி கலாச்சாரங்களை கடந்து செயல்படுவதன் மூலமாக மட்டுமே இன்றைய சவால்களை நாம் எதிர் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.