மகளை பார்க்க சென்ற தந்தை…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து….!!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி நர்சின் தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபம் பகுதியில் ஜோசப்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். செண்பகராமன் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜோசப்பின் மகள் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜோசப் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் முத்துநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜோசப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ஜோசப்பின் உடலை போராடி மீட்டனர். பின்னர் அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.