மகளை பார்க்க சென்ற ஆசிரியர்களுக்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சூராணம் கிராமத்தில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்டோரியா ராணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இரண்டு பேரும் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கார்ளா என்ற மகள் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு சிவகங்கை உள்ள பள்ளியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மகளை பார்ப்பதற்காக சிவகங்கை சென்றுள்ளனர். அதன் பின் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.

அப்போது அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று சோதித்து பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த ரூ. 40,000 மற்றும் 30 பவுன் நகை ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கணவன்-மனைவி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.