மகளை பார்க்க சென்றவருக்கு… வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி… மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு..!!

பெரம்பலூரில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வல்லாபுரம் கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியம்மாள் என்ற மனைவி உள்ளார். பெரியம்மாள் கடந்த 12-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மகள் ராணியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நிலையில் இருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று ஆய்வு செய்தார்.

அப்போது வீட்டின் மறைவான இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த ரூ. 37,000 மற்றும் 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. ஆள் இல்லாத வீட்டில் மர்ம நபர்கள் நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் பெரியம்மாள் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.