“மகளை கிண்டல் செய்த எலக்ட்ரீசியனை கொலை செய்த தந்தை”…. கைது செய்த போலீஸார்…!!!!!

மகளை கிண்டல் செய்த வாலிபரை தந்தை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி சாதரக் கோன்விளையை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் மணிகண்டன். இவரின் சகோதரி உச்சிமாகாளி என்பவர் திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் வசித்து வரும் நிலையில் அவரின் மகளுக்கு மொட்டை போடும் நிகழ்ச்சி களக்காடு அருகே இருக்கும் திருக்குறுங்குடி நம்பி கோவிலில் நடைபெற இருந்தது.

இதனால் மணிகண்டன் அவரின் நண்பர் எலக்ட்ரீசியன் கண்ணன் என்பவரை அழைத்துக்கொண்டு திருச்செந்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது வீரராகவபுரம் தெருவை சேர்ந்த ராஜ் அவரின் மனைவி மற்றும் மகள் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்த வழியாக சென்ற கண்ணன் அவர்களை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து ராஜின் மனைவி ஏன் என் மகளை கிண்டல் செய்கிறாய் என கேட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

பின் கண்ணன், மணிகண்டன், விக்கி, காசி உள்ளிட்டோர் வீரராகவபுரம் குதிரை வண்டி தெருவில் நள்ளிரவு நேரத்தில் பேசிக்கொண்டு இருந்த பொழுது ராஜ் தனது மகளை கிண்டல் செய்வதற்காக தனது மைத்துனர் ராஜ் வடிவேலுடன் அங்கு வந்து கண்ணனை கழுத்து மற்றும் உடல் பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதனால் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து ராஜை கைது செய்துள்ளனர். மேலும் ராஜ வடிவேலை தேடி வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *