தெலுங்கானா மாநிலத்தில் தண்ணீரில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் (47) நேற்று கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் குடும்பத்துடன் எல்என்டி நீர் தேக்கத்திற்குச் சென்றுள்ளார். அங்கு செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது மகள் சைனித்யா தண்ணீரில் தவறி விழுந்த நிலையில் தந்தை விஜயகுமாரும் மகன் விக்ராந்தும் அவரைக் காப்பாற்ற முயன்ற போது மூவரும் நீரில் மூழ்கினர்.

இதைப் பார்த்து தாய் அலறி துடித்ததால் அங்கிருந்த மீனவர் சங்கர் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றினார். நீரின் ஆழத்தில் மூழ்கிய விஜய் குமாரை காப்பாற்ற முடியவில்லை. குழந்தைகளின் கண் முன்னே தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.