மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்கும் திட்டமானது ஜூலை மாதம் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமை தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜூன் மாதத்தில் விண்ணப்பங்களான அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மேலும் விரிவு படுத்தப்பட உள்ளதாகவும் இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும் குறிப்பாக தமிழகத்தில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.