தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் திருப்பூரில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மகளிருக்கு நாம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். ஆனால் அதையும் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கொள்ளையடிக்கிற கொள்ளைக்கார ஆட்சியாக பாஜக ஆட்சி இருக்கிறது. தாய்மார்களின் இந்த கோபம் எல்லாம் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்க தான் போகிறது என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.