ராஜஸ்தானில் வசிக்கும் ஒருவர் சொத்துக்காக தனது மகளின் பிறப்புறுப்பை காயப்படுத்தி உடையில் விந்தணுவை தடவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உறவினர்களுக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்களை பலாத்கார வழக்கில் சிக்க வைத்து மொத்த சொத்தையும் அபகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இதனால் தனது மகள் மற்றும் மனைவியை உறவினர் பாலியல் பலாத்காரம் செய்ததாக சம்பந்தப்பட்ட நபர் கடந்த 2023 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் புகார் கொடுத்த நபரே தனது மகளின் பிறப்புறுப்பை காயப்படுத்தி உடையில் விந்தணுவை தடவியது தெரியவந்தது. அந்த சிறுமி ஆடையில் இருந்த விந்தணு அவரது தந்தையுடையது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.