மகரம் ராசிக்கு… வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.. திருமண தடைகள் அகலும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சொந்த பந்தங்களால்  வந்த துயர் விலகி செல்லும். நினைத்தது நிறைவேற நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். இன்று பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி செல்லும். எதிர்நீச்சல் போட்டாவது எப்படிப்பட்ட காரியத்தையும் சிறப்பாகவே செய்வீர்கள். இன்று சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவு ஏற்படும். திருமணத் தடைகள் விலகி செல்லும்.

இன்று வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கலில் பிறரை நம்பி எந்த வித முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும்.  பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே எப்பொழுதும் போல இருங்கள். இன்று  மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். அதேபோல கல்வியில் நல்ல மதிப்பெண்களும் அவர்கள் பெறுவார்கள். தேர்வு முடியும் வரை கொஞ்சம் கடினமாக உழைத்து எப்பொழுதும் பாடங்களைப் படியுங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், கருநீல நிறம் உங்களுக்கு அதிக அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: கரு நீலம் மற்றும் பச்சை நிறம்