மகரம் ராசிக்கு… போட்டி, பொறாமைகளை சந்திப்பீர்கள்.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தகுதிக்கு மீறிய செயல்களில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரம் மந்த நிலையில் கொஞ்சம் இயங்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். உணவு விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். இன்று கொடுக்கல் வாங்கலில் ஓரளவு அவல நிலை ஏற்பட்டாலும், பெரிய தொகையை ஈடுபடுவதே தயவுசெய்து தவிர்க்கவேண்டும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். வியாபார வெற்றிக்கு உதவும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் சற்று சிறப்பான லாபத்தை தான் இன்று பெற இயலும்.

இன்று  போட்டி பொறாமைகளையும் நீங்கள் சந்திக்க கூடும். அது மட்டுமில்லை இன்று எதிரிகளிடமிருந்து கொஞ்சம் விலகியே இருங்கள். யாரிடமும் வீண் வாக்கு வாதங்கள் எதுவும் செய்யாதீர்கள். பயணங்கள் செல்லும் பொழுது உடல் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள். அடுத்தவரிடம்  பேசும்போது பொறுமையாக  பேசுங்கள். இன்று  மாணவச் செல்வங்கள் கல்வி கடுமையாக உழைப்பார்கள் அதேபோல் கல்வியில் அவர்களுக்கு ஆர்வம் மிகுந்து காணப்படும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் செய்யுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்