மகரம் ராசிக்கு… பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.. தெய்வ தரிசனங்கள் மேற்கொள்வீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வாங்கல்கள், ஒழுங்காகும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். சுணங்கிய  காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.  பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். பூர்வீக சொத்துக்களை வாங்கும் முயற்சி கைகூடும். இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால், பொன், பொருள், ஆடை ஆபரணங்கள் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை கொடுப்பதாகவே இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

பெயர் புகழ் அதிகரிக்க கூடிய காலம் என்றே இன்று சொல்லலாம். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டுகளை பெறுவார்கள். மாணவர்கள் இன்று கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டும். கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். இறை வழிபாட்டுடன் கல்வியை தொடங்குவது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

அதிர்ஷ்டமான: திசை கிழக்கு