மகரம் ராசி அன்பர்களே..! இன்று வரவு திருப்தி தரும் நாளாகவே இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உதவி செய்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்துவது கூடிய எண்ணங்கள் மேலோங்கும். இன்று அனைத்து விஷயத்திலும் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை கூடும். இன்று உத்தியோக உயர்வுகள் இடமாற்றங்கள் யாவும் தடைகளுக்குப் பின் கிடைக்கும். கோபத்தை தவிர்த்து பேசுவது ரொம்ப நல்லது.
பேசும் பொழுதும் வார்த்தைகளில் குறித்து பேசுவது நல்லது. அரசியல்வாதிகள் மக்களின் தேவையை அறிந்து செயல்பட்டால் மட்டுமே பதவிகளை காப்பாற்றிக் கொள்ள முடியும். வாகனத்தில் செல்லும் போது நிதானத்தை பின்பற்றவேண்டும். வாகனத்தை சீர் செய்யக்கூடிய எண்ணங்கள் உருவாகும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். மிக கடுமையாக உழைப்பீர்கள், இருந்தாலும் படித்த பாடத்தை கொஞ்சம் எழுதிப் பாருங்கள் அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடும் போது, அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஊதா நிறம்