மகனை பிடிக்க முயன்ற மூதாட்டி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. விருதுநகரில் சோகம்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி பகுதியில் மாடத்தியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துவீரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாடத்திம்மாளை முத்துவீரன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென மாடத்தியம்மாளுக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மகனின் தோளை பிடிப்பதற்கு முயற்சி செய்த போது மூதாட்டி நிலைதடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

இதனை அடுத்து படுகாயம் அடைந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *