மகனை பார்க்க சென்ற தந்தை…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தவளப்பள்ளம் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செந்தில் அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து செந்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *