ப்ளீஸ்..! சொல்லுறத கேளுங்க…. காலில் விழுந்து கும்பிடுகிறோம்…. கதறிய அரசு அதிகாரிகள்

மயிலாடுதுறை அருகே முகக்கவசம் அணியாமல் சென்றவர்களின் காலில் விழுந்து அரசு அதிகாரி ஒருவர் முகக்கவசம் அணிய வலியுறுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முகக்கவசம் அணியாமல் கடைவீதிக்கு வந்தவர்களை மணல்மேடு பேரூராட்சி பொது சுகாதார மேற்பார்வையாளர் சாமிநாதன் தடுத்து நிறுத்தி ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதைதொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வந்தவர்களின் கால்களில் விழுந்து கை கூப்பி வணங்கி முகக்கவசத்தை வழங்கி அணிந்து கொள்ள செய்தார். இந்நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *