ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்…. அதிக பணம் செலவு செய்யணுமா?… வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

ஸ்மார்ட் போன் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் வரும் தினங்களில் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரிக்கலாம். இதற்குரிய அறிகுறிகளை நிறுவனங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளது. சென்ற முறைகூட நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றியது. அந்த அடிப்படையில் அண்மையில் ஏர்டெல் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தின் விலையை 2 வட்டங்களில் அதிகரித்தது. ஏர்டெல் நிறுவனமானது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மொபைல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கான குறைந்தபட்ச கட்டணத்தை 57 சதவீதம் உயர்த்தி ரூபாய்.155 ஆக புது கட்டணம் நிர்ணயித்து உள்ளது.

முன்னதாக இந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணமானது ரூபாய்.99-ஆக இருந்தது. இருப்பினும் இந்த புது கட்டணம் ஹரியானா மற்றும் ஒடிசா போன்ற 2 மாநிலங்களில் மட்டும் இப்போது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. ஜியோ அனைத்து டிஸ்னி+ஹாட்ஸ்டார் திட்டங்களையும் நிறுத்தியது. ஜியோ தன் டிஸ்னி +ஹாட்ஸ்டார் சந்தாவுடன் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களையும் நீக்கி இருக்கிறது. அதுமட்டுமின்றி நிறுவனம் தன் OTT தளமான JIO சினிமாவை விளம்பரப்படுத்துகிறது. இம்முறை FIFA உலகக்கோப்பை இந்தியாவில் ஜியோ சினிமாவில் மட்டுமே நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

இது தவிர்த்து வர இருக்கும் ஐபிஎல் சீசனின் நேரடி ஒளிபரப்பு உரிமையும் RILன் ஒரு பகுதியாக இருக்கும் Viacom 18 உடன் உள்ளது. IPL போட்டிகளை ஜியோ சினிமாவில் மட்டுமே பார்க்க இயலும். இவ்வழியில் நிறுவனம் தன் OTT தளத்தை அமைக்கிறது. எனினும் ரூபாய்.99 ரீசார்ஜ் திட்டத்துடன் ஒப்பிடும் போது, ​​ரூபாய்.155 ரீசார்ஜ் திட்டத்தில் பயனாளர்கள் பல பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் ரூபாய்.155க்கு, பயனர்கள் 300 SMS மற்றும் 1GP டேட்டாவையும் பெறுகிறார்கள். அத்துடன் ரூபாய்.155 திட்டத்தின் வேலிடிட்டி 24 தினங்களாக இருக்கும்.

அதே நேரம் ரூபாய்.99 திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 தினங்களாக இருக்கும். இது தவிர்த்து பயனர்கள் 155 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் Wynk Music மற்றும் Hello tunes இலவசமாக பெறுவர். ஆனால் இந்த ரீசார்ஜ் திட்டம் டேட்டா மற்றும் SMS (அ) Wynk Music, Hellotune ஐப் பயன்படுத்தாத பயனர்களுக்கு விலை உயர்ந்த ஒப்பந்தம் ஆகும். இந்நிலையில் ஏர்டெல்-ஐ தொடர்ந்து ஜியோ, விஐ ஆகிய நிறுவங்களும் அதன் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரிக்கலாம் என எதிரிப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply