பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் பிரபாஸ், அமிதாப்பச்சன் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்த பதான் திரைப்படம் ரிலீஸ் ஆன 27 நாட்களில் 1000 கோடி வசூல் சாதனை புரிந்ததால் தற்போது தீபிகா படுகோனேவின் வின் மார்க்கெட் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நாக் அஸ்வின் இயக்கும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்திற்காக நடிகை தீபிகா படுகோனே 18 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெரும் நடிகையாக தற்போதைய தீபிகா படுகோனே உயர்ந்துள்ளார்.