உலகில் உள்ள பலரும் பொதுவாக செல்லப் பிராணிகளை ஆர்வத்துடன் வளர்த்து வருகிறார்கள். குறிப்பாக செல்லப் பிராணிகளுக்கு வசதி படைத்தவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறார்கள். இந்நிலையில் தற்போது உலகின் பணக்கார செல்லப்பிராணி பூனை பற்றி பார்க்கலாம். அதாவது இந்த பூனைக்கு இன்ஸ்டாகிராமில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இந்த பூனை இதுவரை instagram-ல் 7267 ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இதன் பெயர் நளா. இதன் உரிமையாளர் முதல்முறையாக கடந்த 2012 ஆம் ஆண்டு பூனையின் செயலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
இதனை பலரும் பார்த்த நிலையில் தொடர்ந்து அதன் செயல்பாடுகளை வீடியோவாக எடுத்து இன்ஸ்ட்டாவில் வெளியிட்டு வருகிறார். இந்த பூனை குட்டி ஒரு வீடியோவுக்கு இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கிறது. இதனால் இதுவரை ரூ.895 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது உலகின் மிகப் பணக்கார பூனை என்ற பெருமையை பெற்றதோடு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இதனை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் ஒருவர் செல்லப் பிராணிகள் கடையிலிருந்து வாங்கிய நிலையில் தற்போது அதன் செயல்பாடுகளை இன்ஸ்டாவில் வீடியோவாக வெளியிடுவதே தன்னுடைய முழு நேரங்களை அமைந்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் இதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை விலங்குகளை வளர்க்கும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.