ப்பா செம… மிரட்டலான லுக்கில் செல்வராகவன்… காட்டுத் தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

செல்வராகவனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன் . அடுத்ததாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செல்வராகவன் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முறுக்கு மீசை, வெள்ளை தாடியுடன் மிரட்டலான லுக்கில் செல்வராகவன் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.