ப்பா… இந்த சின்ன முட்டைக்குள்ள இத்தனை சத்துக்களா…? காடை முட்டையின் 10 நன்மைகள்…!!

கோழி முட்டையை விட 10 மடங்கு புரதச் சத்து அடங்கியது. இதைத் தவிர ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியிருக்கும். இவ்வளவு சத்துக்கள் கொண்ட காடை முட்டையை நாம் சாப்பிடும் பொழுது அதில் கிடைக்கக்கூடிய நன்மைகளை பார்க்கலாம்.

அசைவ உணவுகளில் காடை முட்டைக்கு என தனி இடம் உண்டு. அதில் சமீப காலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருவது காடை முட்டை தான். ஏனென்றால் இவற்றில்  இருக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும், மருத்துவ குணங்களும் தான் இதற்கு காரணம். இவை பார்ப்பதற்கு அளவில் சிறியதாகவும் மேலே சிறுசிறு கரும்புள்ளிகளாகவும் அமைந்திருக்கும்.

இதில் அடங்கியுள்ள சத்துக்கள்:

இரும்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், சிங்க், தயாமின், விட்டமின் பி6, வைட்டமின் பி12, விட்டமின் ஏ, கால்சியம், விட்டமின் ஈ.

1. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது:

காடை முட்டையில் அடங்கியிருக்கும்  விட்டமின் டி, உணவில், கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதன் மூலமாக கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்கும்.

2.அலர்ஜியைப் போக்கும்

உடலில் உண்டாகக்கூடிய அலர்ஜி காரணமாக மூக்கிலிருந்து நீர் வடிவது, தும்மல் மற்றும் உடல் சிவந்து காணப்படுவது இது போன்ற அலர்ஜி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த காடை முட்டையை சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கக்கூடிய ஒரு வகையான புரதம் அலர்ஜியை எதிர்த்து அவை உண்டாகுவதை  தடுக்கிறது.

3 ரத்தசோகையை குணமாக்கும்

உடலில் புதிய ரத்த உற்பத்திக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் இந்த காடை முட்டையில் அடங்கியிருக்கும். உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் இந்த முட்டையை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த அளவு சீராக இருக்கும்.

4.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தினமும் முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலிமை அடையும். இதன் மூலமாக தொற்று நோய்கள் உண்டாகக் கூடிய பல்வேறு பிரச்சனைகள் தடுக்கப்படும். அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம் இதுபோன்ற பிரச்சனைகளால் அவதிபடுபவர்கள் காடை முட்டையை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

5. அல்சர் குணமாகும்

செரிமான பாதையில் உண்டாகக் கூடிய காயங்கள் மற்றும் புண்களை ஆற்றும் ஆற்றல் இந்த முட்டைக்கு உண்டு. இவை சாப்பிட்டு வந்தால் உடலில் அமிலம் சமப்படும். இதன் மூலமாக வயிற்றில் புண்கள் உண்டாவதை விரைவில் குணமாகும்.

6.புற்றுநோய் வராமல் தடுக்கும்

புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கும். அவ்வப்போது உணவில் சேர்த்து சாப்பிட்டால் புற்றுநோய் வருவது தடுக்கப்படும், ஞாபகசக்தியை அதிகரிக்கும். இதை  சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாட்டை தூண்டும். மூளையின் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட தேவையான சத்து நல்ல அளவில் இருக்கிறது.  உடலில் சக்தி அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காடைமுட்டை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

7. இளமையை பாதுகாக்கும்

செலினியம், வைட்டமின் ஏ மற்றும் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது. இது சருமத்தை பாதுகாப்பதோடு, சரும சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கும். இதன் மூலமாக என்றும் இளமையாக இருப்பதற்கு மிக உதவியாக இருக்கிறது.

9. உடல் சுத்தமாகும்

உடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக் கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றி உடலை  சுத்தமாக்கும். உடலிலுள்ள  நச்சுப்பொருட்கள் வெளியேறுவதன் விளைவாக உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

10. தசைகள் வலிமை

அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் உடற்பயிற்சி செய்பவர்கள் உடல் வலிமை ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காடைமுட்டை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. இதில் அடங்கி இருக்கக்கூடிய அதிகப்படியான புரதச்சத்து புதிய தசைகள் உருவாவதற்கும், தசைகளை வலிமையாக்கவும்  மிகவும் உதவியாக இருக்கும். நல்ல கட்டுக்கோப்பான உடல் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காடை  முட்டையை தவறாமல் சாப்பிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *