இந்தியாவில் மூத்த குடிமக்கள் ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் தாங்கள் முதலீடு செய்வதற்கு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களையே நாடுவார்கள். இதன் காரணமாக போஸ்ட் ஆபீஸில் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தபால் அலுவலகங்களில் மூத்த குடிமக்களுக்காக மாதாந்திர வருமான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
இதேபோன்று மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வரிச்சலுகையும் இருக்கிறது. இந்த திட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சேர்ந்து கொள்ளலாம். மேலும் பிக்சட் டெபாசிட் திட்டமும் சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு சிறந்த திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் வரை வரி விலக்கும் உண்டு. இதேபோன்று வருடாந்திர திட்டமும் நல்ல லாபத்தை கொடுக்கும். இந்த திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு 5.5 சதவீதம் முதல் 6.5 சதவீதம் வரை நல்ல வருமானம் கிடைக்கும்.