போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்… அதிரடி வாகன சோதனை… 2 பேர் கைது…

கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவிலிருந்து தேனி மாவட்டத்திற்கு லாட்டரி சீட்டுககளை சட்டவிரோதமாக கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடலூர் லோயர்கேம்ப் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கம்பம் சர்ச் தெருவைச் சேர்ந்த மோகன், அனுமந்தன்பட்டி சேர்ந்த ஆரோக்கியசாமி என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சோதனை செய்தபோது இருக்கையின் கீழ் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 5700 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருந்துள்ளது.

இந்த லாட்டரி சீட்டுகளை கேரளாவில் இருந்து அனுமதியின்றி சட்ட விரோதமாக கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ஆரோக்கியசாமி மற்றும் மோகன் ஆகிய 2 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லாட்டரி சீட்டு, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *