போலீசார் தாக்குதலால் “உயிரிழந்த இளம் பெண்”…. எச்சரிக்கை விடுத்த ஐ.நா….. விமர்சித்து பேசும் ஈரான் அரசு….!!!!

உயிரிழந்த பெண்ணின் வழக்கில் பாரபட்சம் இன்றி  விசாரணை செய்ய வேண்டும் என ஐ.நா. அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஈரான் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹிஜாப் அணிவது  கட்டாயம். இதை அணியாதவர்களை கண்காணிப்பதற்காக நன்னெறி பிரிவு போலீசார்  உள்ளனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாசா அமினி என்ற பெண் சரியாக ஹிஜாப்பை அணியவில்லை என கூறி அவரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். ஆனால்  அங்கு அவர் மயங்கி   விழுந்தார். இதனையடுத்து 3  நாட்கள் கழித்து அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் அந்த பெண்ணை  போலீசார்  துன்புறுத்தியதால் தான்  உயிரிழந்ததாக புகார்கள் எழுந்தது. ஆனால் போலீசார்   யாரும் துன்புறுத்தவில்லை என தெரிவித்தனர்.

இது குறித்து அந்த பெண்ணின் தந்தை  செய்தி வலைதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில். எனது மகளை போலீசார் வாகனத்தில் ஏற்றி செல்வதை சிலர் பார்த்துள்ளனர் என தெரிவித்தார். ஆனால் காவல்துறையினர் அந்தப் பெண் மயங்கி விழுந்த வீடியோ காட்சியை வெளியிட்டனர்.  இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை பிரிவு பொறுப்பு ஆணையர் நடா    அல் -நசீஃப் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹிஜாப்  அணிவது என்பது பெண்கள் முகத்தில் அறையப்படுவது போன்றது. மேலும் காவல்துறையினர் பெண்களை கம்பால்  தாக்குவது மட்டும் இல்லாமல் அவர்களை போலீஸ் வாகனத்தில் தூக்கி வீசுகின்றனர்.

இது குறித்த வீடியோ காட்சிகள் எங்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் மாசா  அமினி துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பாரபட்சம் இன்றி  சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளது. இதற்கு ஈரான் அரசு எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது குறித்து ஐ.நா. அதிகாரிகள் விசாரணை நடத்துவதை ஈரான் அரசு விமர்சனம் செய்துள்ளது. மேலும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்துள்ளனர்.