போரடித்துப்போன சூட்டிங் சாப்பாடு…. “ராஷ்மிகாவை ஸ்பெஷலாக கவனித்த ரன்பீர் கபூர்”… பாருடா….!!!!!

ராஷ்மிகாவுக்கு ஸ்பெஷலாக உணவு எடுத்து வந்து கவனித்துள்ளார் ரன்பீர் கபூர்.

தமிழ் சினிமா உலகில் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் தயாராகி வருகிறது. விஜய் தேவரகொண்டாவுடன் ராஸ்மிகா நடித்த கீதா கோவிந்தம் படம் வெற்றி பெற்றதால் ஆந்திராவிலும் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா நடித்த புஷ்பா படம் பழமொழிகளில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ராஷ்மிகாவுக்கு ஒரே விதமான காலை உணவை சாப்பிட்டு போரடித்து விட்டதாக ரன்பீர் கபூரிடம் கூறியுள்ளார். அவரோ தனது தனிப்பட்ட சமையல்காரரை வரவழைத்து ராஷ்மிகாவிற்கு ஸ்பெஷல் ஆக உணவு சமைத்துக் கொண்டு வந்து தந்திருக்கின்றார். அதை சாப்பிட்டுவிட்டு உங்களுக்கு கிடைத்தது போன்ற திறமையான சமையல்காரர் எங்களுக்கு கிடைக்கவில்லையே என தனது மனக்குறையை வெளிப்படுத்தினாராம்.